பார்க்காமல் பார்கிறேன் ..

உன்னை ஓவியமாக தீட்டவில்லை ,

                                   ஒரு காகிதத்தில் உன் அழகை நிரப்ப முடியாது என்பதால். ..

உன்னை பாடலாக பாடவில்லை,

                                   உன்னை பற்றி பாடுவதற்கு 10 வரிகள் போதாது என்பதால்..

உன்னை நிலவாக பார்க்கவில்லை,

                                   அதுவும் 28 நாட்களுக்கு  ஒரு முறை காணாமல் போவதால்

உன்னை கடவுளாக பார்கவில்லை ,

                                   கடவுளின் அருள் கூட பக்தன் வேண்டினால் தான் கிடைக்கும் என்பாதால் 

உன்னை  என் தோழியாக  பார்க்கவில்லை ,

                                   நட்பில் கூட பிரிவு வரும் என்பதால்..

உன்னை என் மனைவியாக பார்க்கவில்லை,

                                  அவளின் பாசத்தில் என் குழந்தைக்கும் உரிமை  இருப்பதால் ..

உன்னை என் தாயாக பார்க்கவில்லை ,

                                   என் தாயின் பாசத்தில் தம்பிக்கும் பங்கு இருப்பதால் ..

உன்னை  என் காதலியாக பார்கவில்லை ,

                                    காதலில் பாதி காமம் என்பதால். ..

 

உன்னை எப்படி பார்ப்பது என்று தெரியாததால்  தான் என்னவோ ,

                                  உன்னை பார்த்து கொண்டே இருக்கிறேன் ..

                                                                                                                                                   redlove

                                                                         காதலுடன்…..